Posts

Showing posts from April, 2018

குடல் புண் (அல்சரை) வயிற்று வலி முழுமையாக குணப்படுத்த இயற்கை வழிகள்.

Image
T உலகில்  சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள்.  உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் செயல்படும். சரியான நேரத்திற்கு அமிலம் சுரக்கும். அந்த சமயத்தில் வயிற்றில் உணவில்லையென்றால் அது காலியான வயிற்றில் பரவி, குடலின் சுவர்களை அரிக்கத் தொடங்கும்.  தினமும் இது தொடர்கதை ஆனால் பின்னர் அமிலம் அரித்து புண்ணாகி அதுவே வயிற்றுப் புண் எனப்படும் அல்சர். தற்போதுள்ள பரபரப்பான இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரையும் தாக்கி வருவது இந்த வயிற்றுப்புண், குடல்புண் தான். இதை நாகரிகமாக தற்போது அல்சர் என்று சர்வசாதாரணமாக கூறுகிறோம். இது சாதாரண விஷயம் கிடையாது. "இந்த அல்சர் அதிகமானதால் குடலில் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவுக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது" என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அது தவிர்த்து வேறு காரணங்களாலும் வயிற்றுப் புண் உண்டாகும். வயிற்றில் ஹைஸ்பைலோரி என்ற பாக்டீரியாக்களால் உருவானால் அல்சர் ஏற்படும் வாய்ப்புண்டு. மேலும் தாங்க முடியாத மன அழுத்தம், அதிக கோபம்,