Posts

Showing posts from October, 2014

சர்­வ­ரோக நிவா­ர­ணி­ வெண்டிக்காய்

Image
வெண்­டிக்காய் சாப்­பிட்டால் மூளை வளரும் என்று சொல்லிச் சொல்­லியே குழந்­தை­க­ளுக்கு சோறூட்டும் அம்­மாக்­களை பார்த்­துள்ளோம். வெண்­டிக்­காய்க்கும் அறிவு வளர்ச்­சிக்கும் நேரடி தொடர்பு இருக்­கி­றதோ இல்­லையோ அனீ­மியா, ஆஸ்­துமா, கொலஸ்ட்ரோல், மலச்­சிக்கல், புற்­றுநோய், நீரி­ழிவு, வயிற்­றுப்புண், பார்வைக் குறை­பாடு என சகல நோய்­க­ளையும் தீர்க்கும் சர்­வ­ரோக நிவா­ர­ணி­யாக வெண்டிக்காய் உள்­ளது.   கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்கு மிகவும் அவ­சி­ய­மான போலிக் அமிலம் வெண்­டிக்காயில் அதி­க­மாக உள்­ளது. கர்ப்­பத்தில் உள்ள குழந்­தை­யா­னது நல்­ல­ப­டி­யாக வள­ரவும் முதல் ட்ரைமெஸ்­டரின் போதான குழந்­தையின் நரம்பு குழாய்­களின் வளர்ச்­சிக்கும் இந்த போலிக் அமி­ல­மா­னது மிகவும் அவ­சியம்.   வெண்­டிக்­காயின் சிறப்பே அதன் வழவழப்புத் தன்­மைத்தான். ஆனால் அந்தக் வழவழப்பு பிடிக்­கா­மலே பலரும் அதை சேர்த்துக் கொள்­வ­தில்லை.   உண்­மை­யிலே அந்த வழ­வ­ழப்புத் தன்­மை­யில்தான் வெண்­டிக்­காயின் அத்­தனை மருத்­துவப் பலன்­களும் மறைந்­துள்­ளன. இந்த வழ­வ­ழப்பில் உள்ள நார்ச்­சத்து அல்சர் பாதித்­த­வர்­க­ளுக்கு அரு­ம­ருந்து.