சர்­வ­ரோக நிவா­ர­ணி­ வெண்டிக்காய்

வெண்­டிக்காய் சாப்­பிட்டால் மூளை வளரும் என்று சொல்லிச் சொல்­லியே குழந்­தை­க­ளுக்கு சோறூட்டும் அம்­மாக்­களை பார்த்­துள்ளோம். வெண்­டிக்­காய்க்கும் அறிவு வளர்ச்­சிக்கும் நேரடி தொடர்பு இருக்­கி­றதோ இல்­லையோ அனீ­மியா, ஆஸ்­துமா, கொலஸ்ட்ரோல், மலச்­சிக்கல், புற்­றுநோய், நீரி­ழிவு, வயிற்­றுப்புண், பார்வைக் குறை­பாடு என சகல நோய்­க­ளையும் தீர்க்கும் சர்­வ­ரோக நிவா­ர­ணி­யாக வெண்டிக்காய் உள்­ளது.
 
கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்கு மிகவும் அவ­சி­ய­மான போலிக் அமிலம் வெண்­டிக்காயில் அதி­க­மாக உள்­ளது. கர்ப்­பத்தில் உள்ள குழந்­தை­யா­னது நல்­ல­ப­டி­யாக வள­ரவும் முதல் ட்ரைமெஸ்­டரின் போதான குழந்­தையின் நரம்பு குழாய்­களின் வளர்ச்­சிக்கும் இந்த போலிக் அமி­ல­மா­னது மிகவும் அவ­சியம்.
 
வெண்­டிக்­காயின் சிறப்பே அதன் வழவழப்புத் தன்­மைத்தான். ஆனால் அந்தக் வழவழப்பு பிடிக்­கா­மலே பலரும் அதை சேர்த்துக் கொள்­வ­தில்லை.
 
உண்­மை­யிலே அந்த வழ­வ­ழப்புத் தன்­மை­யில்தான் வெண்­டிக்­காயின் அத்­தனை மருத்­துவப் பலன்­களும் மறைந்­துள்­ளன. இந்த வழ­வ­ழப்பில் உள்ள நார்ச்­சத்து அல்சர் பாதித்­த­வர்­க­ளுக்கு அரு­ம­ருந்து. தவிர மலச்­சிக்கல், வயிற்றுப் போக்கு உள்­ளிட்ட வயிற்று உபா­தைகள் அனைத்­தையும் குணப்­ப­டுத்தக் கூடி­யது.
 
ஆன்ட்டி ஆக்­சிடன்ஸ் அதி­க­முள்ள வெண்­டிக்­காய் ஹெல்த் டொனிக் என்றே சொல்லலாம்.
 
இதி­லுள்ள கரையும் நார்ச்­சத்­தா­னது கொல்ஸ்ட்­ரோலின் அளவைக் கட்­டுப்­ப­டு­த்துவதன் மூலம் இதய நோய்கள் வரு­வ­தற்­கான ஆபத்தை குறைக்­கின்­றது. இந்த ஆன்ட்டி ஆக்­சிடன்ட்ஸ், புற்­று­நோய்க்குக் கார­ண­மான செல்­களின் வளர்ச்­சியை தவிர்க்க கூடி­யவை. வெண்­டிக்­காயில் உள்ள விட்­டமின் சி, ஆஸ்­து­மாவின் தீவி­ரத்தைக் குறைக்க கூடி­யது. இதில் உள்ள போலேட், எலும்­புகளை உறு­தி­யாக்கி, ஆஸ்­டி­யோ­பொ­ரோசிஸ் பாதிப்பைக் குறைக்­கி­றது.
 
இரத்­தத்தில் உள்ள சர்க்­கரை அளவைக் கட்­டுப்­பாட்டில் வைக்­கவும் வெண்­டிக்காய் உத­வு­கி­றது. உணவில் வெண்­டிக் காய் அதி­க­மாக சேர்த்துக் கொண்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதி­க­ரித்து, அடிக்­கடி சளி, இருமல் வரு­வதும் தவிர்க்­கப்­ப­டு­கி­றது. எடை குறைப்பு முயற்­சியில் இருப்­போ­ருக்கு மிகவும் உகந்தது வெண்­டிக்காய். காரணம் இதி­லுள்ள அதி­கப்­ப­டி­யான நார்ச்­சத்தும் குறைந்த ஆற்­றலும்.
 
வெண்­டிக்காய் சாப்­பிட்டால் பார்வைத் திறன் மேம்­ப­டும் என்­கிற தகவல் பல­ருக்கும் தெரி­யாது. வெண்­டிக்­காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்­டராக்ட் மற்றும் க்ளாக் கோமா பிரச்சினைகளைத் தவிர்க்க கூடியது. இரத்த விருத்திக்கு உதவும் என்பதும் கொனோரியா எனப்படுகிற முழங்கால் வளைவுப் பிரச்சினைக்கும் உதவும் என்பது பலருக்கு புதிய தகவல்களாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

குடல் புண் (அல்சரை) வயிற்று வலி முழுமையாக குணப்படுத்த இயற்கை வழிகள்.

சளித் தொல்லை