வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்
நிறைய மருந்து மாத்திரைகளை உண்ணும் நீரிழிவு நோயாளிகளின் வாய் அதிகம் நாறும். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கும் வாய் நாறும். பற்சொத்தை இருந்தாலும் வாய் நாறும். மலச்சிக்கலும் பற்களில் பிரச்சினைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் வாய் நாற்றம் அகன்று விடும். வெந்தயத் தேநீர் கூடுதலாக உடல் நாற்றத்தையும் அகற்றும். நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த மருந்தாகவும் வெந்தயத் தேநீர் திகழுகின்றது. வெந்தயத் தூளை காலையில் வெறும் வயிற்றில் உண்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும். நன்கு கழுவிய இரு கரட்டுகளை கடித்துச் சாப்பிட்டால் உமிழ் நீர் நன்கு ஊறி வாய் நாற்றம் அகலும். வெண்டைக் காய் பச்சடி மற்றும் வெண்டைக் காய்கள் சேர்த்த மோர்க் குழம்பையும் சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெண்டைக் காய்களில் உள்ள நார்ப் பொருள்கள் கொலஸ்ட்ரோலை கரைப்பதுடன் மலச்சிக்கலையும் அகற்றி விடுவதால் வாய் நாற்றம் நிரந்தரமாகவே அகன்று விடும். ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெண்டைக் காயை பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதற்கு பிஞ்சு வெண்டைக் காய்களே நல்லது. அவரைக் காயில் லெசித்தின் என்னும் நார்ப்