வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்


 

நிறைய மருந்து மாத்திரைகளை உண்ணும் நீரிழிவு நோயாளிகளின் வாய் அதிகம் நாறும். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கும் வாய் நாறும். பற்சொத்தை இருந்தாலும் வாய் நாறும்.
மலச்சிக்கலும் பற்களில் பிரச்சினைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் வாய் நாற்றம்  அகன்று விடும். 
வெந்தயத் தேநீர் கூடுதலாக உடல்  நாற்றத்தையும் அகற்றும். நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த  மருந்தாகவும் வெந்தயத் தேநீர் திகழுகின்றது. வெந்தயத் தூளை காலையில் வெறும் வயிற்றில் உண்டால்  நீரிழிவு நோய் கட்டுப்படும். நன்கு கழுவிய இரு கரட்டுகளை கடித்துச் சாப்பிட்டால் உமிழ் நீர் நன்கு ஊறி வாய் நாற்றம் அகலும்.
வெண்டைக் காய் பச்சடி மற்றும் வெண்டைக் காய்கள் சேர்த்த மோர்க் குழம்பையும் சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெண்டைக் காய்களில் உள்ள நார்ப் பொருள்கள் கொலஸ்ட்ரோலை கரைப்பதுடன் மலச்சிக்கலையும் அகற்றி விடுவதால் வாய் நாற்றம் நிரந்தரமாகவே அகன்று விடும். ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெண்டைக் காயை பச்சடியாக  சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதற்கு பிஞ்சு வெண்டைக் காய்களே நல்லது. அவரைக் காயில் லெசித்தின் என்னும் நார்ப் பொருள் உள்ளது. இது குடலில் மலம் தங்கõமல் பார்த்துக் கொள்வதால் நாம் பேசும்போதும், மூச்சு       விடும்போதும் நாற்றம் எடுக்காது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலினை உற்பத்தி செய்து கொடுப்பதுடன்  வாய்  நாறாமலும் பார்த்துக் கொள்கிறது அவரைக் காய்.
குடல் பகுதிகள் நன்கு செயல்பட்டுக் கொண்டே இருந்தால் வாய் நாறாது. காய்ச்சலும் வராது. இதற்கு விற்றமின் "சி' அதிக அளவில் உள்ள கொத்தமல்லிக்கீரை உதவும். இந்தக் கீரையில் 15 கிராம் கீரையை மென்று திண்ணலாம். இல்லாவிட்டால் காலையிலோ அல்லது மதிய உணவிலோ கொத்தமல்லிக் கீரைத் துவையல் இடம்பெறுவது நல்லது. இதனால்  வாய் நாற்றம் தடுக்கப்படும்.
25 கிராம் அளவு கொத்தமல்லிக் கீரையை நன்கு கழுவி சாறாக்கி அதை  அருந்தினால் காய்ச்சல் நேரத்தில்
உடல் குளிர்ச்சியைப்  பெறும். வாய் நாற்றமும் அகலும். கொத்தமல்லிக் கோப்பி அருந்தினாலும் வாய் நாற்றம் அகன்று விடும்.
ஆனால் தொடர்ந்து வாய் நாற்றம் இருந்தால் பல் வைத்தியரிடம் ஆலோசனை  பெறவும். அத்துடன் வாயில் உள்ள பற்றீரியாக்களை அழிக்க தினமும் இருவேளை சாத்துக்குடிச் சாறும் அருந்தி வரவும். சிறிதளவு உப்பைச் சேர்த்து இந்தச் சாற்றை அருந்தினால் பல் ஈறுகள் பலம் பெறும். மலச்சிக்கல் இருந்தால் காலையில் சாத்துக்குடிச் சாறு அருந்துங்கள்.
ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்த எலுமிச்சை சாறு வாய் நாற்றத்தை  தடுக்கும். காலையின் தினமும் அருந்தி வந்தால் வாய் நாற்றத்தை முற்றாக  போக்கும்.
அப்பிள் பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ப் பொருள் குடலில் தங்கியுள்ள கெட்டுப் போன, கெடுதியான
பொருட்களை உடனே வெளியேற்றுவதால் வாய் நாற்றமும் தடுக்கப்படுகின்றது. இதனால்  குடலும் இரத்தமும் சுத்தமாகி சுத்தமான மூச்சு வெளியிடக் கூடியதாய் இருக்கும்.
நீண்ட நாட்களாக குடல் கோளாறு இருந்தாலும்  வாய் நாறும். இதற்கு பீச் பழம் மிகவும் சிறந்தது.
 கடுமையான உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு கொண்டைக் கடலையும் அதேபோல் எலுமிச்சம் பழ ஜூஸும் சக்தியை வழங்குவதுடன்  வாய் நாற்றத்தையும் தடுத்து விடுகின்றன. வாய் துர்நாற்றத்தைப் போக்க எந்த முறையைப் பின்பற்றினாலும் 21 நாட்கள் தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். அப்பொழுதுதான் குடல் சுத்தமாகி வாய்  துர்நாற்றம் அடிக்காமல் பாதுகாக்கலாம். ஆரோக்கியமும் தொடர்ந்து பேணப்படும்.

Comments

Popular posts from this blog

தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

குடல் புண் (அல்சரை) வயிற்று வலி முழுமையாக குணப்படுத்த இயற்கை வழிகள்.

நீரிழிவு, சர்க்கரை நோய்