பழையசோறு

இரவில் இரண்டு கைப்பிடி அளவு சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும்;காலையில் எழுந்ததும்,அதில் தேவையான அளவு கல் உப்பு சேர்க்க வேண்டும்;அத்துடன் சிறிய வெங்காயம்  மூன்றை நறுக்கிப் போட்டு கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும்; இதற்குப்பெயரே நீராகாரம்! இதுதான் கோடை காலத்தை ஆரோக்கியமாக கழிக்க உதவும் காலை உணவு.இப்படி தினமும் ஒருவேளை நீராகாரத்தைப்பருகி வந்தால் என்ன நிகழும்?


ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவி நீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும் 

என்ற பழமொழியினைச் செயல்படுத்துவோம்;ஆற்றுநீரும்,அருவி நீரும் இல்லாத ஊர் மக்களுக்கு வரப்பிரசாதமாக நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட எளிய உணவே இந்த நீராகாரம்.

இந்த நீராகாரத்தை தினமும் அருந்தி வந்தால்,பக்கவாதம்,அசதி,முடக்குவாதம் போன்ற வாதநோய்கள் குணமாகிவிடும்;இதன் ஆரம்பக்கட்டமும் சீரடைந்துவிடும்;
பித்தநோய்களான வயிற்றுப்புண்,ரத்தமூலம்,சருமநோய்களும் வராது;மேலும் கோடை கால நோய்களான வயிற்றுவலி,சருமத்தில் தோன்றும் வேனல்கட்டி,வியர்க்குரு,தேக அனல்(வெளியே அலைந்து திரிந்துவிட்டு வீட்டிற்குள் வந்ததும் உடலில் ஏற்படும் உணர்வு) போன்றவை ஒருபோதும் வராது.

சோற்றுநீரின் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச்சாலையில் ஆராய்ந்து பி.எச்.டி.பட்டம் பெற்றுவிட்டார்.இதே போல நமது பல பழக்கவழக்கங்கள்,மரபுகள் மேல்நாட்டினரால் விஞ்ஞான வடிவம் பெற்றுக்கொண்டிருக்கின்றன

Comments

Popular posts from this blog

தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

குடல் புண் (அல்சரை) வயிற்று வலி முழுமையாக குணப்படுத்த இயற்கை வழிகள்.

Interview With a Top Cardiologist !!!