நீரிழிவு, சர்க்கரை நோய்

சாக்லெட், ரெட் ஒயின் போன்ற உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கும் சதவீதம் குறையுமென அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 


அதிக சாக்லேட் சாப்பிட்டாலும், ரெட் ஒயின் குடித்தாலும் நீரிழிவு நோய் தாக்கும் சதவீதம் குறையுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் 2 ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் ரெட் ஒயின் அருந்துபவர்களுக்கு 2-வது ரக நீரிழிவு தாக்குதல் குறைவாக இருந்தது.


அவற்றில் உள்ள ஆந்தோ சியானின்ஸ் உள்ளிட்ட சில மூலக்கூறுகள் இன்சுலினை போதிய அளவு சுரக்க செய்து ரத்தத்தில் குளுகோஸ் அளவை சீராக வைக்க உதவுகிறது. அதனால்தான் நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக உள்ளது தெரிய வந்தது என தெரிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 




சர்க்கரை நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு


சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இனி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Insulin injection
Insulin injection
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டியுள்ளது. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர 2 ஆம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக கூடிய சூழிநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் (சிறுகுறிஞ்சான்) என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை, தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள்.
இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஊசி மட்டுமே உள்ளது. ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைப்பதாக தெரிவித்துள்ளனர்.
பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின்விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் பெறுவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நீரிழிவுக்கு வெந்தயம்

Comments

Popular posts from this blog

தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

குடல் புண் (அல்சரை) வயிற்று வலி முழுமையாக குணப்படுத்த இயற்கை வழிகள்.

Interview With a Top Cardiologist !!!