தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

தொப்பையுடன் திரிபவர்களுக்குப் பஞ்சமே இல்லை. சிலர், அதைச் செல்வச் செழுமையின் அடையாளமாகக் கூட நினைக்கின்றனர். ஆனால், அது ஆரோக்கியமான மனோபாவம் இல்லை. இன்னும் சிலர், உணவுகளுக்கு அடிமையாகி, வரையறை இல்லாமல், ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவுகளையும் உண்கிறார்கள். இவர்களால் உணவுக் கட்டுப்பாடு என்ற ஒன்றை நினைத்துப் பார்க்கவும் முடியாது.
இத்தகையோர்களுக்காகவே அக்குபஞ்சர் ஒரு சிறந்த நிவாரணத்தை தர முனவருகிறது. அது என்னவென்று தற்போது பார்ப்போம்.
முதலில் தொப்பை ஏன் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தொப்பை விழுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, உடலில் தானாக கொழுப்பு சேருதல். அதாவது நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பைக் கல்லீரல் சரியாக ஜீரணிக்காததால் ஏற்படுவது என்று பொருள். இரண்டாவது காரணம், நம் உடலுக்குள் அதிகமாக திரவங்கள் சேர்வது. இவ்விரண்டு காரணங்களைத் தவிர ஒரு சிலருக்கு தைராய்டு சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடலின் எடை அதிகரித்து தொப்பை ஏற்படும்.
தொப்பை ஏற்பட்டால் அன்றாட பணிகளைக கூட செய்வதற்கு சிரமமாகிவிடும். சற்று அலட்சியமாக இருந்துவிட்டால் இதயக் கோளாறு மற்றும் பித்தப்பை கோளாறுகளையும் உருவாக்கிவிடும். ஆகவே தொப்பையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதற்குரிய கவனத்தை செலுத்தி அதனை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
இதற்காக அக்குபஞ்சர் தவிர வேறு எந்த மருத்துவ சிகிச்சை முறையை அணுகினாலும் தொப்பையை குறைக்க இரண்டு விடயங்களை அவசியமாக வலியுறுத்துவார்கள். ஒன்று உணவுக் கட்டுப்பாடு மற்றொன்று உடற்பயிற்சி.
இவ்விரண்டையும் கேட்கும் போது எளிதாகவும், செயல்படுத்தும்போது கடினமாகவும் இருக்கும் என்பது நடைமுறை நிஜம்.
உணவுக் கட்டுப்பாட்டை ஓரளவிற்கு கடைபிடித்துவிட இயலும். ஆனால் தொப்பையை வைத்துக்கொண்டு குனிந்து, நிமிர்ந்து, ஓடி, குதித்து உடற்பயிற்சியை செய்யவேண்டும் என்றால்.. மிகவும் கடினமாகதாக தோன்றும்.
உணவுக் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் ஆயுள் முழுமைக்கும் கடைபிடிக்கவேண்டும். அப்போது தான் அவை கட்டுக்குள் இருக்கும். ஏதேனும் காரணங்களுக்காக இடைநிறுத்தம் செய்தால் மீண்டும் தொப்பை வந்துவிட வாய்ப்பு உண்டு. அதனால் அதற்கு முன் செய்த உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி வீணாகிவிடவும் வாய்ப்பு உண்டு.
ஆனால் தொப்பைக்கு அக்குபஞ்சர் சிறந்த நிவாரணத்தையும் உடனடி பலனையும் தருகிறது. கல்லீரலோடு தொடர்புடைய அக்குப்புள்ளிகள் காதில் உள்ளன. இந்த அக்குப்புள்ளிகளைத் துõண்டுவதன் மூலம் கல்லீரலின் பணியை மேம்படுத்தி, உடலில் தங்கிவிட்ட அதிகப்படியான கொழுப்பை எரிக்க செய்ய இயலும். மேலும் ஜீரண மண்டல உறுப்புகளோடு தொடர்புடைய அக்குப்புள்ளிகளும் காதிலேயே இருக்கின்றன.
அதனையும் தேவையான அளவிற்கு துõண்டிக்கொண்டிருந்தால், வயிற்றிற்குள் தேவைõன அளவு சாப்பாடு சென்றவுடன் வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும். இதன் மூலம் உணவுக்கட்டுப்பாட்டை நம்மை அறியாமலேயே கடைபிடிக்க முடியும்.
அதனைத் தொடர்ந்து அக்குபஞ்சர் மருத்துவத்தில் இதற்கென விசேடமாக தயாரிக்கப்படும் மூலிகை கலந்த எண்ணெய்யை வயிற்றின் மேற்பகுதியில்  தடவிக்கொள்ளவேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள தோலின் தன்மையில் மாற்றம் ஏற்படும்.
ஏனெனில் ’ஓஸ்மாஸிஸ்‘ எனப்படும் அறிவியல் கோட்பாட்டின் படி உடலுக்குள் இருக்கும் அதிகப்படியான திரவம், தோலில் உள்ள சிறு துவாரங்கள் வழியாக வெளியேறிவிடும், 
இப்படி மூன்று வழிகளில் நீங்கள் முயற்சி எடுத்தால் தொப்பையை எளிதாக குறைக்க முடியும்.
பதினைந்து நாள்கள் வரை தினமும் இரண்டு முறையாக, முப்பது நிமிடங்கள் வரை இத்தகைய சிகிச்சைகளை செய்து கொண்டால் உடனடி பலன் கிடைக்கும். அதாவது தொப்பைக்கு எளிய முறையில் குட்பை சொல்லலாம்.
- டொக்டர் எம்.முத்துக்குமார்


எளிதில் தொப்பையை குறைக்கும் வழிகள்!

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 7 அல்லது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.
2. உப்பு: உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
3. தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.
4. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
5. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.
6. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.
7. சிட்ரஸ் பழங்கள்: பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

8. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.
9. கிரீன் டீ: அனைவருக்குமே கிரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த கிரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் கிரீன் டீ குடித்து வாருங்கள்.
10. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.
11. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.
12. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.
13. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால் இதற்கான பலன் உடனே தெரியும்.
14. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
15. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் எடை விரைவில் குறையும்.


உடற்பருமனைக் குறைப்பதில் சிறந்த முறை எது?

இலங்கை, இந்தியா போன்ற தெற்காசிய நாடுகள் எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய மருத்துவ சவால்களில் நீரிழிவிற்கு அடுத்தபடியாக இடம்பெற்றிருப்பது உடற்பருமன் பிரச்சனைத்தான். இதற்காக மருத்துவ உலகம் பேரியாட்ரிக், லைபோசெக்சன், சுப்பர்பிஷியல் லைபோசெக்சன் எனப் பலவகை சத்திர சிகிச் சைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் எதைப் பின்பற்றுவது என்பதில் பலருக்கு சந்தேகம் வரலாம். இது தொடர்பாக இத்துறைசார் நிபு ணர்களைக் கேட்டறிந்ததை இங்கு காண்போம்.
"உடலில் உள்ள கொழுப்பை அகற்ற முதலில் லைபோசக்சன் என்ற சிகிச்சை அறி முகப்படுத்தப்பட்டது. இது பெரும் வரவேற்புப் பெற்றாலும், சத்திர சிகிச்சைக்கு பின்னரான பரா மரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டது. சிறு கவனக் குறைவு ஏற்பட்டாலும், மீண்டும் உடற்பருமனால் பாதிக்கப்படும் வாய்ப்பு உருவானது. இருந்தாலும் உடற்பருமன் பிரச்சினைக்கு ஒரு பாதுகாப்பான சிறந்த நிவாரணமாகவே லைபோசக்சன் சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்" என்று தன் அனுபவத் தைக் கூறுகிறார் டொக்டர் கிருஷ்ண ஹண்டே.
"உடல் எடையைக் குறைப்பதில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமான சிகிச்சை பேரியாட்ரிக் சத்திர சிகிச்சை. இச்சிகிச்சையின்போது, வயிற்றுப் பகுதியில் அதாவது உணவுப்பையில் அதிகளவு உணவு ஏற்காதவாறு ஒரு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வகையிலான சத்திர சிகிச்சைக்குப் பின் ஒருவர் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் உடற்பருமன் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கிறது. ஆனால் இச்சிகிச்சையால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைப்பதில்லை என்று இந்த சிகிச்சையை மேற் கொண்டவர்கள் குற்றம் சுமத்தினர். இருந்தாலும் பலர் இதைப் போற்றத்தான் செய்தனர். காரணம், இவ்வகையிலான சத்திர சிகிச்சை மூலம், மூன்று மாதங்களில் 30 முதல் 45 கிலோ வரையிலான நிறையை குறைக்கமுடிந்ததே" என்றார் டொக்டர் குமரன்.
"உடற்பருமன் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் (ஒபீசிட்டியால் பாதிக்கப்பட்டவர் கள்) என்னை அணுகி, தம்முடைய உடல் எடையைக் குறைத்து, தம் உடலுக்கு
ஒரு அமைப்பு கொடுத்துவிடுமாறும், அதன் பிறகு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்து உடலைப் பராமரித்துக் கொள்வதாகவும் கூறுவோருக்கு நான் சுப்பர் பிஷியல் லைபோசக் சன் என்ற சத்திர சிகிச்சையை மேற்கொள்கிறேன். அதேபோல் சில ஆண்களுக்கு மார்பகப் பகுதி யில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும். அவர்களுக்கும் இந்த சிகிச்சையைத்தான் செய்கிறேன்.
அதேநேரம், 'உடற்பயிற்சி செய்யமாட் டேன். உணவுக்கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க மாட்டேன். என் உடலிலிருந்து கொழுப்பை உறிஞ்சி எடுங்கள்' என்று கேட்டால் நான் ஒரு போதும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
அதாவது உடல் எடை அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தடையாக இருந்து, உடல் எடையைக் குறைந்தால் வேகமாக இயங்கலாமே என்ற எண்ணமுடையவர்களாக இருந்தால்தான் இந்த சுப்பர்பிஷியல் லைபோசக்சன் சிகிச்சையைச் செய்வோம். இந்த சிகிச்சைக்குப் பிறகு நாங்கள் கூறும் உணவுக் கட்டுப்பாட்டை உறு தியாகக் கடைப்பிடித்தால் ஆரோக்கியமான அள விற்கு உடல் எடை குறையும்."
"உடற்பருமன் பிரச்சினைக்காக மேற்கொள்ளப்படும் பேரியாட்ரிக் சத்திர சிகிச்சையில் வயிற்றுப்பகுதியின் கொள்ளளவு செயற்கையாகக் குறைக்கப்படுகிறது. இதனால் பலன் இருந்தாலும், எதிர்காலத்தில் சுருக்கப்பட்ட வயிற்றுப்பகுதியில் விற்றமின் பி சத்து கிரகிக்கப்படுவதில் குறைபாடு ஏற்படும். இதனால் ஆயுள் முழுவதும் விற்றமின் பி கொம்ப்ளெக்ஸ் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருக்கும். பேரியாட் ரிக் சத்திர சிகிச்சை என்பது உடலுக்குள் செய்யப் படுவது. இவ்வகையான சிகிச்சையின் பின் உடல் எடையை 40 முதல் 60 கிலோ வரை குறைத் தவர்களும் உண்டு. உணவுக் கட்டுப்பாட்டை பின் பற்றாததால் 40 கிலோ வரை எடை கூடியவர்களும் உண்டு. ஆனால் நாங்கள் செய்யும் கொஸ்மெடிக் சத்திர சிகிச்சை என்பது, ஆயுள் முழுவதும் பாதுகாப்பானது. ஏனெனில் நாங்கள் கொழுப்பை மட் டுமே உறிஞ்சி எடுக் கிறோம். ஆனால் அதன்பின் நாங் கள் சொல்லும் உடற்பயிற்சி மற் றும் உணவுக் கட் டுப்பாட்டை உறுதியா கக் கடைப்பிடித்தால் போதும்.


மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்

“இவ­வோடை டின்னர் சாப்­பிடப் போனால் கடைக்­காரன் பூட்டப் போறன் என்று அவ­ச­ரப்­ப­டுத்தி எழுப்­பி­னால் தான் எழும்­புவாள்” என்று நக்கல் அடித்­தவர் “வாய் நோகாமல் சாப்­பிட்டு ஸ்டைல் காட்­டுவா” என நீட்டி முடித்தார்.
மற்­ற­வர்கள் தவ­றெனக் காரணம் காட்டிப் பேசி­னாலும் நக்கல் அடித்­தாலும் சிலரால் தமது பழக்­கத்தை மாற்ற முடி­யாது. இருந்த­போதும், சில பழக்­கங்கள் நன்­மையும் தரலாம். மெது­வாக உண்­ப­வர்­களில் பலர் மெல்­லிய உடல் வாகி­ன­ராக இருக்­கி­றார்கள்.
மாறாக இன்­றைய உல­க­மா­னது அவ­ச­ரமும் நேர­நெ­ருக்­கடி மிக்­க­தா­கவும் மாறி­விட்­டது. பல்­வேறு பராக்­கு­க­ளுக்கு குறிப்­பிட்ட குறு­கிய நேரத்­திற்குள் கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. அதுவும் அமெ­ரிக்கா போன்ற மேலை­நா­டு­களில் இதன் தாக்கம் மிக அதிகம். உணவின் சுவையை இர­சிப்­ப­தற்கோ, நன்கு மென்று தின்­பதற்கோ நேர­மின்றி வாயில் போடு­வதும் விழுங்­கு­வ­து­மாக அடித்துப் பிடித்து ஓடு­கி­றார்கள். இத­னால்­ தானோ என்­னவோ அவர்கள் பெரும்­பாலும் குண்டுப் பீப்­பாக்கள் போலத் தோற்­ற­ம­ளிக்­கி­றார்கள்.
மெது­வாக உண்ணல் அண்­மையில் செய்­யப்­பட்ட ஒரு ஆய்­வா­னது, ஆறு­த­லாகச் சாப்­பி­டு­வ­தா­னது உடல் நலத்­திற்கு நன்மை பயக்கும் எனச் சொல்­கி­றது. 35 அதிக எடை­யுள்­ள­வர்­க­ளையும் 35 சாதா­ரண எடை உள்­ள­வர்­க­ளையும் கொண்டு 2 நாட்­க­ளுக்கு மட்டும் செய்­யப்­பட்ட ஆய்வு பற்­றிய தகவல் Journal of the Academy of Nutrition and Dietetics சஞ்­சி­கையின் ஜன­வரி 2ஆம் திகதி இதழில் வெளி­யா­கி­யுள்­ளது.
அதன் பிர­காரம் சாதா­ரண எடை உள்­ள­வர்கள் ஆறு­த­லாகச் சாப்­பி­டும்­போது வழ­மையை விட 88 கலோ­ரிகள் குறை­வா­கவே உள்­ளெ­டுத்­தி­ருந்­தனர். ஆனால் அதிக எடை­யுள்­ள­வர்கள் 58 கலோ­ரிகள் குறை­வாக உள்­ளெ­டுத்­தி­ருந்­தனர். வேறு­பா­டுகள் இருந்­த­போதும் உட்­கொண்ட கலோரி வலுவில் குறைவு ஏற்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. உணவின் அளவு கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. தங்கள் தேவைக்கு ஏற்ப உண்ட போதும் இது நடந்­தது.
ஆறு­த­லாக சாப்­பி­டு­வது என்­பது சுமார் 22 நிமி­டங்­களை எடுத்­தது. விரை­வாகச் சாப்­பி­டு­வது சுமார் 8 நிமி­டங்­களை எடுத்­தது.
ஆறு­த­லாக சாப்­பி­டும்­போது அதீத எடை­யுள்­ள­வர்கள் வழ­மையை விட 33 சத­வி­கிதம் அதி­க­மாக நீர் அருந்­தி­னார்­களாம் எனவும் அந்த ஆய்வு கூறி­யது. அதேவேளை சாதா­ரண எடை­யுள்­ள­வர்­களும் சற்றுக் குறை­வாக அதா­வது 27 சத­வி­கிதம் அதி­க­மாக நீர் அருந்­தி­னார்­களாம்.
சாப்­பிட்டுக் கொண்­டி­ருக்கும் போது இடையில் நீர் அருந்தக் கூடாது என்ற நம்­பிக்கை எங்­களில் பல­ரி­டையே இருக்­கி­றது. உணவு சமி­பாட்டு நொதி­யங்­களை (enzymes) நீர்த்துப் போகச் செய்து சமி­பா­ட­டை­வதைப் பாதிக்கும் என்­பது தவ­றான கருத்­தாகும். மாறாக உதவக் கூடும். உணவுத் துகள்­களை சிறி­ய­தாக்கி கரையச் செய்­வதால் சமி­பாடு துரி­த­மாக்கி விரைவில் உறிஞ்ச செய்யும் என்­பதே உண்­மை­யாகும்.
இந்த இடத்தில் மற்­றொரு விட­யத்­தையும் ஞாப­கப்­ப­டுத்­தலாம். ஒருவர் உணவு உட்­கொள்­கையில் வயிறு நிறைந்த உணர்வை அவர் பெறு­வ­தற்கு உட்­கொள்ள ஆரம்­பித்த நேரத்­தி­லி­ருந்து சுமார் இரு­பது நிமி­டங்கள் மூளைக்குத் தேவைப்­ப­டு­கி­றது என்­ப­தாகும்.
இதைத் தவிர ஜப்­பானில் 1700 இளம் பெண்­க­ளி­டையே செய்­யப்­பட்ட மற்­றொரு ஆய்வும் ஆறு­த­லாகச் சாப்­பி­டு­வதால் விரை­வி­லேயே வயிறு நிறைந்த உணர்வு ஏற்­ப­டு­கி­றது என்றும் அதனால் அவர்கள் உள்­ளெ­டுக்கும் உணவின் கலோரி வலு குறை­வா­கவே இருக்­கி­றது எனவும் கூறி­யது.
University of Rhode Island செய்­யப்­பட்ட மற்­றொரு ஆய்­வா­னது ஆறு­த­லாக உண்­ப­வர்கள் நிமி­டத்­திற்கு 28.4 கிராமை உட்­கொள்­வ­தா­கவும், இடை­ந­டு­வான வேகத்தில் உண்­ப­வர்கள் நிமி­டத்­திற்கு 56.7 கிராமை உட்­கொள்­வ­தா­கவும், வேக­மாக உண்­ப­வர்கள் நிமி­டத்­திற்கு 88 கிராமை உட்­கொள்­வ­தா­கவும் கண்­ட­றிந்­தது.
நன்­மைகள் இவற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஆறு­த­லாக உண்­பதின் நன்­மை­களை நாம் சுல­ப­மாக ஊகித்து அறி­யலாம். ஆறு­த­லாக சாப்­பி­டும்­போது குறைந்த அளவு கலோ­ரி­களே உள்­ளெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இது ஏன்?
விரை­வாகச் சாப்­பி­டும்­போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்­ப­டாது.
எனவே அதீ­த­மாக உணவை உட்­கொண்­டு­வி­டு­வார்கள். மாறாக ஆறு­த­லாகச் சாப்­பி­டும்­போது கொஞ்சம் கொஞ்­ச­மா­கவே உணவு உட்­கொள்­ளப்­ப­டு­வதால் ஓர­ளவு உண்­ணும்­போதே 20 நிமி­டங்கள் கடந்­து­விடும். அப்­பொ­ழுது வயிறு முட்­டிப்­போச்சு என்­பது தெரி­ய­வரும். மேல­தி­க­மாக உட்­கொள்ள நேராது.
ஆறு­த­லாகச் சாப்­பி­டும்­போது நீர் அருந்­து­வ­தற்­கான வாய்ப்பு அதிகம் கிடைப்­பதால் உணவின் இடையே நீர் அருந்­து­வார்கள். இதுவும் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து உணவின் அளவைக் குறைக்கச் செய்யும்.
நிதா­ன­மாகச் சாப்பிடும்­போது நன்கு மென்று உண்ணக் கூடி­ய­தாக இருக்கும். மென்று உண்­ணு­வதால் உணவு சற்று அதிக நேரம் வாயிற்குள் இருக்கும். உணவுச் செரி­மானம் எச்­சிலில் ஆரம்­பித்து­ வி­டு­கி­றது. எனவே ஆறு­த­லாகச் சாப்­ப­டும்­போது உணவு நன்கு ஜீர­ண­மாகும்.
உணவை ஆறு­த­லாக சாப்­பி­டும்­போது நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதி­க­ரிப்பு தடுக்­கப்­படும் என்­பது உண்­மையே.
ஆறு­த­லாக உண்­ணும்­போது சுவை­களை சப்­புக்­கொட்டி ரசிக்க முடி­கி­றது. வாச­னையை நன்கு நுகர முடி­கி­றது. உணவு தயா­ரிக்­கப்­பட்ட விதத்­தையும் அதன் பதத்­தையும் உணர்ந்து கொள்ள முடி­கி­றது. அதனால் மனத் திருப்தி ஏற்­ப­டு­கி­றது. இதனால் உணவு உண்ணும் செயற்­பா­டா­னது மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தாக இருக்கும்.
உணவு வேளையை மேலும் மகிழ்ச்­சி­யாக்க நாம் செய்ய வேண்­டி­யது என்ன?
இர­ச­னை­யோடு உண்­ணுங்கள் மென்­மை­யான இசையை பின்­ன­ணியில் இசைக்க வையுங்கள். பளீ­ரெனத் தெறிக்கும் ஒளி­களை அணைத்து மெல்­லிய இத­மான ஒளியை வையுங்கள். மெழுகு திரி ஒளியில் இரவு உணவு உண்­பது அற்­பு­த­மான அனு­ப­வ­மாக இருக்கும். வேறு சுவாரஷ்ய­மான விட­யங்­களில் மனத்தைச் செலுத்­தா­தீர்கள். தொலைக்­காட்சி பார்ப்­பது, விவா­தங்­களில் ஈடு­ப­டு­வது போன்­ற­வற்றைத் தவி­ருங்கள்.
உணவில் மட்­டுமே மனத்தைச் செலுத்­துங்கள். நாக்கும் மூக்கும் உங்கள் சுயஉணர்வை மிகைப்­ப­டுத்தி அரிய அனு­ப­வத்தைக் கொடுக்கும். உணவின் சுவையும் பதமும் உள்­ளத்தில் கிளர்ச்­சியை ஏற்­ப­டுத்தும். திருப்தி கிட்டும்.
மற்­ற­வர்­க­ளுடன் சேர்ந்து உண்­ணும்­போது, இடையில் ஒரு சில நிமி­டங்­க­ளுக்கு உண்­பதை நிறுத்தி அவர்­க­ளுடன் சில வார்த்­தைகள் பேசுங்கள். நேரம் கழியும் விரைவில் வயிறு நிறைந்த உணவு கிட்­டி­விடும். ஆயினும் சுவாரஷ்ய­மான விட­யங்­களை ஆரம்­பித்து அதில் மூழ்கி உண்ணும் அளவை மீறி­விடா­தீர்கள்.
நன்கு சாப்­பிட்டு வயிறு நிறைந்­தி­ருக்கும் தரு­ணத்­தில்­தானே பொது­வாக ஈற்­று­ணவு (dessert) வரு­கி­றது. இருந்­த­போதும் ஈற்­று­ணவின் இனிப்பும் நறு­ம­ணமும் நிறைந்த வயிறு நிறைந்­ததை மறக்க வைக்கும். மீண்டும் அவற்றை சாப்­பிடத் தூண்டும். எனவே உணவு முறையில் ஒரு தலை­கீ­ழான மாற்­றத்தை ஏற்­ப­டுத்­துங்கள்.
முதலில் ஈற்­று­ணவை சுவை­யுங்கள். கேக் அல்­லது புடிங் போன்ற எது கிடைத்­தாலும் சிறுகக் கடி­யுங்­கள். அதன் சுவையில் நனைந்த பின்னர் முக்­கிய உண­விற்கு செல்­லுங்கள். தேவை­யற்ற கலோ­ரி­களை உள்­ளெ­டுப்­பதை இதனால் தடுக்க முடியும்.
பழங்­களும் காய்­க­றி­களும் நிறைந்த உண­வு­களைத் தேர்ந்­தெ­டுங்கள். இவற்றைச் சப்பிச் சாப்­பிட கூடிய நேரம் தேவைப்­ப­டு­வதால் நீங்கள் ஆறு­த­லா­கவே சாப்­பிட முடியும். அது முன்­கூ­றிய நன்­மை­களைத் தரும்.
உணவு உட்­கொள்ளும் பாத்­தி­ரத்தை சிறி­தாகத் தேர்ந்­தெ­டுங்கள். இதனால் நீங்கள் உங்கள் கோப்பையில் பகிரும் உணவு மட்டுப்பட்டிருக்கும். அதனால் உண்ணும் அளவு குறையும்.
மெது­வாகச் சாப்­பி­டுங்கள் என்­பது சொல்­வ­தற்கு சுலபம். ஆனால் மும்மு­ர­மான வேலையில் இருக்கும் போது ஆற அமர இருந்து சாப்பி­டு­வது கஷ்­டம்தான். ஆனால் உணவு நேரங்­களை ஒழுங்­கு­ மு­றையில் கடைப்­பி­டித்து நேரம் தவ­றாது உண்­ணுங்கள். ஒழுங்கு முறையைக் கடைப்­பிடித்தால் நேரம் ஒதுக்­கு­வதில் சிர­ம­மி­ருக்­காது. ஒவ்­வொரு உணவு வேளைக்கும் குறைந்­தது 20 நிமி­டங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஒதுக்குங்கள்.
அத்துடன் ஒரு நேர உணவிற்கும் அடுத்த உணவிற்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மெதுவாகச் சாப்பிடுங்கள். நலம் மிக்க மெல்லிய உடலினராய் மாறி மகிழுங்கள்


குண்டு உடம்புக்காரர்கள்


  • தினமும் இரண்டு கைப்பிடி அளவு கொள்ளை ஊறவைத்து, ஒரு துணியில் கட்டி முளைக்க வைத்து, அத்துடன் கொஞ்சம் பால் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதைப்பிழிந்து பால் எடுத்துக் குடித்து வர மூட்டுவலி, சளித்தொந்தரவு நீங்கும். ஊள் சதை குரையும்.
  • வெள்ளைபூண்டை நெயில் வறுத்து சாப்பிடவும். குண்டு உடம்புக்காரர்கள் கொடி போல ஆகிவிடுவார்கள்.

தொப்பையைக் குறைக்கும் ஓமம்


எம்முடைய வீட்டு சமையலறையில் இருக்கும் பல்வேறு உணவுப்பொருட்களில் ஓமமும் ஒன்று. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை வயிறு பிரச்சினை என்றால் இன்றும் ஓமத்தைத்தான் நாடுவார்கள். இன்றும் சில ஊரகப்பகுதிகளில் ஓமவாட்டர் என்ற பெயரில் ஓம நீர் கிடைக்கிறது. ஆனால் அவை தரமானவையா? என்பது ஆய்வுக் குரியது. இருந்தாலும் ஓமத்தினால் நாம் பெறும் பலன்கள் அதிகம்.
அதற்கு முன் ஓமத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள் ளுங்கள்.
ஓமத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், றிபோஃபுளோவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன. அதே போல் ஓமத்தில், ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் என மூன்று வகையான ஓமங்கள் இருக்கின்றன. உடலுக்கு ஏற்படும் அனைத்து வித நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் ஓமத்திற்கு இருக்கிறது. இன்றும் கூட தமிழக கிராமங்களில் ஓமத்தின் விதைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து பருகுகின்றனர்.
வாயுப் பிரச்சினையால் தவிப்ப வர்களுக்கு ஓமம் ஒரு அரு மருந்து. எப்படியெனில் 125 கிராம் தயிர் அல்லது ஒரு கோப்பை தயிர், அதனுடன் இரண்டு கிராம் அள விற்கு ஓமம், சிறிதளவு கருப்பு உப்பு இவை மூன்றையும் சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இதனை மதிய உணவிற்கு பின் பத்து முதல் பதினைந்து தினங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விக்கல், குமட்டல் மற்றும் அஜீரண கோளாறுகள் கூட சரியாகிவிடும்.
ஒரு சிலர் மருத்துவர்களின் பரிந்து ரைப்படி ஆறு வேளைகளுக்கு சிறிது சிறிதாக சத்துள்ள ஆகாரங்களை சாப்பிடுவார்கள். ஆனால் அவர்களின் உடலில் போதிய வலுவிருக்காது. ஒருசிலரை பார்க்கும் போது பலசாலிகள் போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் அவர்களால் சிறிய பொருளைக்கூட தூக்கி இரண்டாவது மாடிக்கு எடுத்துச் செல்லமுடியாது.அதையும் கடந்து எடுத்துச் சென்றவுடன் களைப்பு அதிகமாகி சோர்ந்துவிடுவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்கவைத்து, அதனுடன் பனை வெல்லத்தை சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் வலு பெறும்.
குளிர்காலத்திலோ அல்லது பனிக்காலத்திலோ ஒரு லீற்றர் தண் ணீரில் அரை டீஸ்பூன் ஓமத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் ஆஸ்துமா நெருங்காது. அதே பால் மார்பில் சளி இருந்தாலும் அதனை அகற்ற ஓம எண்ணெயை மார்பின் மீது பூசி வந்தால் மார்பு சளி இளகி நிவாரணம் கிடைப்பதை உணரலாம். ஒரு சிலர் ஓமப்பொடியுடன் சிறிது உப்பு சேர்த்து மோரில் கலந்து பருகு வார்கள். இவர்களுக்கும் மார்பு சளி இளகி வெளியேறிவிடும்.
வயிற்றுவலியால் அவதிப்படும்போது சூடான நீரில் மிளகையும், ஓமத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதை தண்ணீரில் விட்டு கொதிக்கவைத்து குடித்தால் வயிற்று வலி குணமாகும். அதே போல் அசைவம் அல்லது சைவத்தை விருந்து போன்ற வைபவங்களில் பங்குபற்றி சாப்பிட்டால், அதனால் ஏற்படும் செரிமானங்களுக்கும், பொதுவில் ஏற்படும் செரிமான கோளாறுகளுக்கும் ஓமம் அருமருந்து.இத்தகைய நேரத்தில் சாப்பிட்ட பின் ஓமத்தை சிறிதளவு எடுத்து வாயில் மென்று சாப்பிட்டால் போதும் செரிமான கோளாறுகள் நீங்கும்.
இவற்றையெல்லாம் விட இன்றைய திகதியில் தொப்பை யை குறைப்பதற்கும் நாம் படும் அவஸ்தையிருக்கிறதே. அதைச் சொல்லி மாளாது. உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி, உணவு கட்டுப்பாடு, சத்தான உணவு என எத்தனையோ முறைகளில் தொப்பையை குறைப்பதற்காக ஈடுபட்டிருப்போம். ஆனால் தினமும் உறங்குவதற்கு முன், நான்கு துண்டு அன்னாசிப்பழம், இரண்டு ஸ்பூன் ஓமப்பொடி இவையிரண்டையும் தண்ணீரில்விட்டு கொதிக்கவைக்க வேண்டும். நன்கு வெந்தவுடன்.அதனை அப்படியே மூடி வைத்துவிடவேண்டும். அதிகாலையில் எழுந்து அதனை நன்றாக கரைத்து பருகவேண்டும்.இவ்வாறு பதினைந்து நாள்கள் செய்தால் உங்களிடம் இருக்கும் தொப்பை காணாமல் போய் இருப்பதை நீங்களே காண்பீர்கள்.

Comments

Popular posts from this blog

குடல் புண் (அல்சரை) வயிற்று வலி முழுமையாக குணப்படுத்த இயற்கை வழிகள்.

நீரிழிவு, சர்க்கரை நோய்