Posts

குடல் புண் (அல்சரை) வயிற்று வலி முழுமையாக குணப்படுத்த இயற்கை வழிகள்.

Image
T உலகில்  சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள்.  உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் செயல்படும். சரியான நேரத்திற்கு அமிலம் சுரக்கும். அந்த சமயத்தில் வயிற்றில் உணவில்லையென்றால் அது காலியான வயிற்றில் பரவி, குடலின் சுவர்களை அரிக்கத் தொடங்கும்.  தினமும் இது தொடர்கதை ஆனால் பின்னர் அமிலம் அரித்து புண்ணாகி அதுவே வயிற்றுப் புண் எனப்படும் அல்சர். தற்போதுள்ள பரபரப்பான இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரையும் தாக்கி வருவது இந்த வயிற்றுப்புண், குடல்புண் தான். இதை நாகரிகமாக தற்போது அல்சர் என்று சர்வசாதாரணமாக கூறுகிறோம். இது சாதாரண விஷயம் கிடையாது. "இந்த அல்சர் அதிகமானதால் குடலில் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவுக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது" என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அது தவிர்த்து வேறு காரணங்களாலும் வயிற்றுப் புண் உண்டாகும். வயிற்றில் ஹைஸ்பைலோரி என்ற பாக்டீரியாக்களால் உருவானால் அல்சர் ஏற்படும் வாய்ப்புண்டு. மேலும் தாங்க முடியாத மன அழுத்தம், அதிக கோப...

மார்பகப் புற்றுநோயின் 12 அறிகுறிகள்

உலகில், பல பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றார்கள். பெண்கள் தங்களின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கவனிக்கும்படியும், சுயபரிசோதனைகளை சரியான கால இடைவேளையில் செய்யும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இத்தகைய மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான 12 அறிகுறிகளை விளக்குகிறது இந்த காணொளி. http://www.bbc.com/tamil/global-41714036

வாழைப்பூ

வாழையடி வழை என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். வாழைக்கு அழிவே கிடையாது, அதன் தண்டு, காய், பழம், பூ, இலை, நார், பட்டை என எல்லாவற்றையும் நாம் பயன்படுத்துகிறோம். இதற்கு காரணம் வழையின் மருத்துவ குணங்கள் பல. இதில் வாழைப்பூ பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கின்றது, ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைபடுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும். வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும். உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும். மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, இரத்த மூலம் போ...

பல்வலியை குணப்படுத்தும் அற்புத வழிகள்!

வெங்காயமானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நச்சுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வெங்காயமானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நச்சுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள வெங்காயத்தை நமது பற்களின் அடியில் வைத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். தீராத பல்வலியை குணப்படுத்தும் அற்புத வழிகள் ஒரு வெங்காயத்தை மெல்லிசாக வெட்டி, அதை நமது பற்களின் அடியில் கீழ் பகுதியில் வைத்தால், தாங்க முடியாத பல்வலி விரைவில் குறைந்துவிடும். பல்வலி ஆரம்பத்தில் இருக்கும் போதே அதனுடைய வலி அதிகரிக்கச் செய்யாமல், பல்வலியை போக்குவதற்கு, அந்த வெங்காயத்தை சாதாரணமாக மென்று வந்தாலே போதும். கிராம்பு எண்ணெய் பல்வலியை போக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. காட்டன் பஞ்சை 3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து பல்வலி இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை போன்றே வெள்ளரிக்காய்யை மெல்லிசாக நறுக்கி, அதை பற்களுக்கு அடியில் சிறிது நேரம் வைத்து இருந்தா...

Yoga for the Eyes / Yoga für die Augen - Art of Living Yoga

Image

கோளாறுகள், நோய் தீர

1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். 6....

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி!

மஞ்சளை அரைத்துப்பூசினால் தான் அழகு கிடைக்கும் என்றில்லை. மஞ்சள் கலந்த நீராவி கூட அழகைக் கூட்டும், தெரியுமாப! மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றை அரைத்து அதன் சாறை எடுத்து, கொதி நீரோடு கலந்து ஆவி பிடியுங்கள். அடுத்து ஒரு கைப்பிடி அளவு துளசியைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். பிறகு 3 எலுமிச்சை இலை அல்லது அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து ஆவி பிடியுங்கள். இத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடித்ததும், கடைசியில் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேயுங்கள். (சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க ஐஸ் ஒத்தடம் அவசியம்) பின்னர், ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை பூசி முகத்தை அலசுங்கள். அப்புறம் பாருங்கள்… `நானே நானா… மாறினேனா..!’ என்று உங்கள் விழிகள் விரியும். அந்தளவுக்கு துடைத்து வைத்த குத்து விளக்காக உங்கள் முகம் ஜொலிக்கும். சீசனில் தான் பசும் மஞ்சள் கிடைக்கும். இதனை காய வைத்தால், அது கஸ்தூரி மஞ்சள், பசும் மஞ்சள் கிடைக்காத சீசனில், மாற்றாக கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம்.