தொப்பையுடன் திரிபவர்களுக்குப் பஞ்சமே இல்லை. சிலர், அதைச் செல்வச் செழுமையின் அடையாளமாகக் கூட நினைக்கின்றனர். ஆனால், அது ஆரோக்கியமான மனோபாவம் இல்லை. இன்னும் சிலர், உணவுகளுக்கு அடிமையாகி, வரையறை இல்லாமல், ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவுகளையும் உண்கிறார்கள். இவர்களால் உணவுக் கட்டுப்பாடு என்ற ஒன்றை நினைத்துப் பார்க்கவும் முடியாது. இத்தகையோர்களுக்காகவே அக்குபஞ்சர் ஒரு சிறந்த நிவாரணத்தை தர முனவருகிறது. அது என்னவென்று தற்போது பார்ப்போம். முதலில் தொப்பை ஏன் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தொப்பை விழுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, உடலில் தானாக கொழுப்பு சேருதல். அதாவது நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பைக் கல்லீரல் சரியாக ஜீரணிக்காததால் ஏற்படுவது என்று பொருள். இரண்டாவது காரணம், நம் உடலுக்குள் அதிகமாக திரவங்கள் சேர்வது. இவ்விரண்டு காரணங்களைத் தவிர ஒரு சிலருக்கு தைராய்டு சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடலின் எடை அதிகரித்து தொப்பை ஏற்படும். தொப்பை ஏற்பட்டால் அன்றாட பணிகளைக கூட செய்வதற்கு சிரமமாகிவிடும். சற்று அலட்சியமாக இருந்துவிட்டால் இதயக் கோளாறு மற்ற...
Comments
Post a Comment