Posts

Showing posts from December, 2013

குழந்தையின்மை இனி இல்லை!

Image
குழந்தையின்மை என்பது வலி மிகுந்த ஒரு நிலை. அதிலும், ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில், அது ஒரு சமூக அந்தஸ்தாகவும் கருதப்படுவதால், இந்நாடுகளைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதியர் அனுபவிப்பது இரட்டிப்பு வலி. குழந்தை பிறப்பை மகப் பேறு என்கிறோம். காரணம், அது ஒரு வரமாகவே கருதப்படுகிறது. ஆனால், இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானம் இந்த வரத்தைப் பெற்றுத் தரும் அளவிற்கு முன்னேறியிருக்கிறது. இந்த முன்னேற்றமே செயன்முறைக் கருத்தரிப்பு. இயற்கையாக, பெண்ணின் உடலின் உள்ளே நடைபெறும் கருக்கூட்டலை வெளியே எடுத்துச் செய்வதே இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படை. இதில், ஒவ்வொருவரின் உடல் தகுதிகளுக்கேற்ப, அவர்களின் பிரச்சினைகளுக்கேற்ப, ஐ.யு.ஐ., ஐ.வி.எஃப்., இக்ஸி, இம்ஸி எனப் பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம், குழந்தையின்மைக்கான கடுமையான பிரச்சினைகள் உடையவர்களும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இன்று இருக்கின்றன. இதுமட்டுமன்றி, கருமுட்டைக் கோளாறுகள் உள்ள பெண்கள் கருமுட்டை தானம் மூலமும், கருப்பை இல்லாத பெண்களாயின் வாடகைத் தாய் மூலமும், உயிரணு இல்லாத ஆண்களாயின் உயிரணு தானம் மூலமும் ...

வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்

Image
  நிறைய மருந்து மாத்திரைகளை உண்ணும் நீரிழிவு நோயாளிகளின் வாய் அதிகம் நாறும். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கும் வாய் நாறும். பற்சொத்தை இருந்தாலும் வாய் நாறும். மலச்சிக்கலும் பற்களில் பிரச்சினைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் வாய் நாற்றம்  அகன்று விடும்.  வெந்தயத் தேநீர் கூடுதலாக உடல்  நாற்றத்தையும் அகற்றும். நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த  மருந்தாகவும் வெந்தயத் தேநீர் திகழுகின்றது. வெந்தயத் தூளை காலையில் வெறும் வயிற்றில் உண்டால்  நீரிழிவு நோய் கட்டுப்படும். நன்கு கழுவிய இரு கரட்டுகளை கடித்துச் சாப்பிட்டால் உமிழ் நீர் நன்கு ஊறி வாய் நாற்றம் அகலும். வெண்டைக் காய் பச்சடி மற்றும் வெண்டைக் காய்கள் சேர்த்த மோர்க் குழம்பையும் சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெண்டைக் காய்களில் உள்ள நார்ப் பொருள்கள் கொலஸ்ட்ரோலை கரைப்பதுடன் மலச்சிக்கலையும் அகற்றி விடுவதால் வாய் நாற்றம் நிரந்தரமாகவே அகன்று விடும். ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெண்டைக் காயை பச்சடியாக  சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதற்கு பிஞ்சு வெண்டைக் காய்களே நல்லது. அவரைக்...