Posts

Showing posts from April, 2014

பழையசோறு

இரவில் இரண்டு கைப்பிடி அளவு சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும்;காலையில் எழுந்ததும்,அதில் தேவையான அளவு கல் உப்பு சேர்க்க வேண்டும்;அத்துடன் சிறிய வெங்காயம்     மூன்றை நறுக்கிப் போட்டு கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும்; இதற்குப்பெயரே நீராகாரம்! இதுதான் கோடை காலத்தை ஆரோக்கியமாக கழிக்க உதவும் காலை உணவு.இப்படி தினமும் ஒருவேளை நீராகாரத்தைப்பருகி வந்தால் என்ன நிகழும்? ஆற்று நீர் வாதம் போக்கும் அருவி நீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும்  என்ற பழமொழியினைச் செயல்படுத்துவோம்;ஆற்றுநீரும்,அருவி நீரும் இல்லாத ஊர் மக்களுக்கு வரப்பிரசாதமாக நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட எளிய உணவே இந்த நீராகாரம். இந்த நீராகாரத்தை தினமும் அருந்தி வந்தால்,பக்கவாதம்,அசதி,முடக்குவாதம் போன்ற வாதநோய்கள் குணமாகிவிடும்;இதன் ஆரம்பக்கட்டமும் சீரடைந்துவிடும்; பித்தநோய்களான வயிற்றுப்புண்,ரத்தமூலம்,சருமநோய்களும் வராது;மேலும் கோடை கால நோய்களான வயிற்றுவலி,சருமத்தில் தோன்றும் வேனல்கட்டி,வியர்க்குரு,தேக அனல்(வெளியே அலைந்து திரிந்துவிட்டு வீட்டிற்க