Posts

Showing posts from 2015

நீரிழிவு, சர்க்கரை நோய்

Image
சாக்லெட், ரெட் ஒயின் போன்ற உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கும் சதவீதம் குறையுமென அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.  அதிக சாக்லேட் சாப்பிட்டாலும், ரெட் ஒயின் குடித்தாலும் நீரிழிவு நோய் தாக்கும் சதவீதம் குறையுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் ரெட் ஒயின் அருந்துபவர்களுக்கு 2-வது ரக நீரிழிவு தாக்குதல் குறைவாக இருந்தது. அவற்றில் உள்ள ஆந்தோ சியானின்ஸ் உள்ளிட்ட சில மூலக்கூறுகள் இன்சுலினை போதிய அளவு சுரக்க செய்து ரத்தத்தில் குளுகோஸ் அளவை சீராக வைக்க உதவுகிறது. அதனால்தான் நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக உள்ளது தெரிய வந்தது என தெரிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  சர்க்கரை நோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இனி இன்சுலின் ஊசி போட்டுக்...

நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்

Image
நல்லெண்ணெய் குளிர்ச்சி தருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கியங்களை வழங்குகிறது. இதில் உள்ள லினோலிக் அமிலம் இரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. நல்லெண்ணெய்யில் உள்ள சத்துக்கள் நல்லெண்ணெயில் விற்றமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த அன்டி அக்சிடென்ட் ஆக செயற்படுகிறது.இது உடலில் கொழுப்புச்சத்தை குறைத்து உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது. நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம் எலும்புகளை பலப்படுத்துகின்றது. தாமிரம் கல்சியம், மெகனீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது மன அழுத்தத்தையும் போக்குகிறது. சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக்கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக் காக்கும். எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை சுத்தமான நல்லெண்ணெய் 10 மி.லீ அளவு எடுத்து வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும்படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து வெண்மையாகி நீர்த்துப் போகும். அப்போது...

தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

Image
தொப்பையுடன் திரிபவர்களுக்குப் பஞ்சமே இல்லை. சிலர், அதைச் செல்வச் செழுமையின் அடையாளமாகக் கூட நினைக்கின்றனர். ஆனால், அது ஆரோக்கியமான மனோபாவம் இல்லை. இன்னும் சிலர், உணவுகளுக்கு அடிமையாகி, வரையறை இல்லாமல், ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவுகளையும் உண்கிறார்கள். இவர்களால் உணவுக் கட்டுப்பாடு என்ற ஒன்றை நினைத்துப் பார்க்கவும் முடியாது. இத்தகையோர்களுக்காகவே அக்குபஞ்சர் ஒரு சிறந்த நிவாரணத்தை தர முனவருகிறது. அது என்னவென்று தற்போது பார்ப்போம். முதலில் தொப்பை ஏன் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தொப்பை விழுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, உடலில் தானாக கொழுப்பு சேருதல். அதாவது நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பைக் கல்லீரல் சரியாக ஜீரணிக்காததால் ஏற்படுவது என்று பொருள். இரண்டாவது காரணம், நம் உடலுக்குள் அதிகமாக திரவங்கள் சேர்வது. இவ்விரண்டு காரணங்களைத் தவிர ஒரு சிலருக்கு தைராய்டு சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடலின் எடை அதிகரித்து தொப்பை ஏற்படும். தொப்பை ஏற்பட்டால் அன்றாட பணிகளைக கூட செய்வதற்கு சிரமமாகிவிடும். சற்று அலட்சியமாக இருந்துவிட்டால் இதயக் கோளாறு மற்ற...