குழந்தைகளின் உணவு முறையில் கவனம் செலுத்துகின்றீர்களா?
- Get link
- X
- Other Apps
ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் எப்போது தனக்குக் குழந்தை பிறக்குமென்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள். இவ்வாறு ஆர்வத்துடன் இருக்கும் ஒரு தாய் தன்னுடைய உடல் நலத்திலும் குழந்தையின் உடல் நலத்திலும் மிகவும் கவனம் செலுத்துவது அவசியம்.
அந்த வகையில் கடந்த காலங்களில் போசாக்கற்ற தாய்மார்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்தில் மிகவும் மந்த நிலையிலேயே உள்ளனர். இதனடிப்படையில் கடந்த 17ஆம் திகதி சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கருத்தரங்கொன்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையை பொறுத்தமட்டில் 2007--2013 ஆண்டு காலப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் ஏனைய உலக நாடுகளையும் விட இலங்கை ஓர் ஆரோக்கியமான நிலையில் காணப்படுவதாக கருத்து தெரிவித்திருந்தது. அதனடிப்படையில்,
சுகாதார அமைச்சு கர்ப்பிணி தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் பயனளிக்கும் வகையில் நல்ல பல கருத்துக்களை வெளியிட்டிருந்தது.
சுகாதார அமைச்சு கர்ப்பிணி தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் பயனளிக்கும் வகையில் நல்ல பல கருத்துக்களை வெளியிட்டிருந்தது.
ஒரு தாயாகப் போகும் பெண்ணுக்கும் மற்றும் அவரின் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கும் பல பொருட்கள் தீங்கு விளைவிக்கலாம். அதனால் கர்ப்பிணிகள் சரும பராமரிப்பு பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த சரும பராமரிப்பு பற்றிய தீர்வுகளினால் கர்ப்பத்தை பாதிக்கும் காரணிகளை அறிந்துக் கொள்ளவும் சரியான சரும பராமரிப்பு தயாரிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டியதும் அவசியமாகும். கர்ப்பிணிப் பெண்கள் ஹோர்மோன்களின் ஏற்ற இறக்கங்கள் காரணமாக சருமத்தின் உணர்திறன் அதிகமாவதற்கு ஆளாவார்கள். இதன் விளைவாக அவர்களது சருமம் கருமை அடைதல் மற்றும் நிறமூட்டலாகிறது.
கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்கும் மற்றும் கருவிலுள்ள குழந்தையின் உடல்நிலைக்கு துன்பம் விளைவிக்க காரணமாக இருக்கும் ஒவ்வாமை பொருட்களிலிருந்து கட்டாயம் விலகி இருக்க வேண்டும்.
எப்போதும் பயன்படுத்தும் பொருட்கள் பாதுகாப்பான பொருட்களாக உள்ளனவா என்றும் மற்றும் அது குழந்தைக்கு எந்த எதிர்வினையும் உண்டாக்காது என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர் கர்ப்பிணி தாய்மாராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது, சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் சேய்க்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். காலை உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது அதற்கு இணையான சத்து தரும் ஓட்ஸ் அல்லது சம்பா, கோதுமை, உப்புமா என்று ஏதாவது ஒரு உணவை அளவோடு சாப்பிடலாம். மதிய உணவுக்கு சோற்றுடன் காய்கறி ஏதேனும் ஒரு கீரை எடுத்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் முட்டையின் வெள்ளைக்கரு, மீன் போன்ற சத்தான அசைவ உணவொன்றை சேர்த்துக்கொள்ளலாம். காலையில் எடுத்துக் கொண்ட அதே மாதிரியான அதே அளவிலான உணவையே இரவைக்கும் எடுத்துக்கொள்ளலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு தாய் தன் போசாக்கு மட்டத்தினை பார்த்துக் கொள்வதுடன் தனது குழந்தையின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவது அவசியம். பிறந்த குழந்தையின் நாக்கில் முதன் முதலாக தேன், சர்க்கரை, பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக் கிருமி இளம் பிள்ளைவாதத்தைக்கூட கொண்டுவரக்கூடும். எனவே அவ்வாறான விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் போது மிகவும் அவதானத்துடனும் அன்புடனும் கொடுக்க வேண்டும் மாறாக கோபத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்தும். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலூட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில் சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்கு தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு சரும மற்றும் உணவுகளில் ஏற்படும் அலர்ஜி வராமல் தடுக்கும்.
-4 மாதம் வரையான குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்தது. மேலும் இக்காலப்பகுதிகளில் தாய் பால் மட்டுமே குழந்தைகளுக்கு பருக்கவேண்டும். நிறைய ஆய்வுகள் கூறும் ஒரு விடயம் தான் குழந்தை பிறந்த பின்னர் அவர்களுக்கு தாய்ப்பாலிலேயே வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும். ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால் அவர்களின் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு பிறந்த குழந்தைக்கு மஞ்சட்காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு செரிமான மண்டலமும் நன்கு செயற்பட ஆரம்பிக்கும் என அறிவித்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் 4--6 மாதத்திற்கு படிப்படியாக வளரும் ஒரு குழந்தைக்கு வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால் அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் பழம் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத் திறனைத் தூண்டுகிறது. இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பதும் தவறு. மேலும் கடலை, பயறு, ஓட்ஸ், பார்லி என அழைக்கப்படும் வாட்கோதுமை போன்ற சத்தான உணவுகளையும் சாப்பிட கொடுக்கலாம். அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால் ஒரு நாளைக்கு 8---10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால் அப்போது இந்த உணவுகளையும் தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.
பின்னர் மெதுவாக வேக வைத்து மசித்த சோறு, காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது அவர்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால் உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.
தொடர்ந்து எட்டு மாதங்களை கடக்கும் குழந்தைகளுக்கு சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.ஒருவருடகாலத்தின் பின் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும்.
குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை என பார்க்கும் போது சமைத்த உணவை 1½ மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள் சாப்பிட கொடுக்க வேண்டும். இல்லையெனில் அந்த உணவு உடலில் மந்தத் தன்மையை உருவாக்கும். இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு பாதிக்கப்படும். 8--9 வயதை அடைந்தவுடன் குழந்தைகளை அதிகாலையில் எழுப்புங்கள்.
அசைவ உணவு கொடுப்பதை கூடியமட்டும் தவிருங்கள். எப்போதும் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுங்கள். வெள்ளைப் பூசணியின் சாறெடுத்து தேன் கலந்து தினமும் கொடுப்பது வளரும் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவாக இருக்கும். இதன் மூலம் அவர்களது கற்கும் திறனும் வளர்ச்சியும் மேம்படும். ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வெள்ளை பூசணியை தவிர்த்து விடலாம். குளிர்பானங்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் கொண்ட மசாலா அடங்கிய உணவுகளை கடைகளில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர் தம்முடைய கருத்துக்களை அவர்கள் மேல் திணிப்பதை விட்டுவிட்டு குழந்தை தனது திறனை தானே கண்டறிய ஊக்குவிக்க வேண்டும்.
குழந்தைகள் பருமனாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவை கொடுத்து உடல் எடையை அதிகரிக்கச் செய்வது மிகவும் தவறான விடயமாகும். 60வயதில் வர வேண்டிய பி.பி.சுகர் போன்றவை 30வயதிலேயே அவர்களை தேடி வந்துவிடும். ஒருவகையில் அவர்கள் பெரியவர்களானதும் இவ்வாறான நோய்கள் தாக்குவதற்கு பெற்றோரே காரணவாளிகளாகின்றனர்.
சமூகத்தினரிடையே தங்களுடைய குழந்தை மிகவும் அழகாகவும், கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்களாக காணப்படவேண்டுமெனவே அநேகமான பெற்றோர்கள் கருதுகின்றனர்.
இதனால் அவர்கள் கையாளும் உணவு முறைகள் அவர்களின் வாழ்க்கையையே சூன்யமாக்கிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பார்க்க வேண்டுமென வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
sour
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment