Posts

தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

Image
தொப்பையுடன் திரிபவர்களுக்குப் பஞ்சமே இல்லை. சிலர், அதைச் செல்வச் செழுமையின் அடையாளமாகக் கூட நினைக்கின்றனர். ஆனால், அது ஆரோக்கியமான மனோபாவம் இல்லை. இன்னும் சிலர், உணவுகளுக்கு அடிமையாகி, வரையறை இல்லாமல், ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவுகளையும் உண்கிறார்கள். இவர்களால் உணவுக் கட்டுப்பாடு என்ற ஒன்றை நினைத்துப் பார்க்கவும் முடியாது. இத்தகையோர்களுக்காகவே அக்குபஞ்சர் ஒரு சிறந்த நிவாரணத்தை தர முனவருகிறது. அது என்னவென்று தற்போது பார்ப்போம். முதலில் தொப்பை ஏன் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தொப்பை விழுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, உடலில் தானாக கொழுப்பு சேருதல். அதாவது நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பைக் கல்லீரல் சரியாக ஜீரணிக்காததால் ஏற்படுவது என்று பொருள். இரண்டாவது காரணம், நம் உடலுக்குள் அதிகமாக திரவங்கள் சேர்வது. இவ்விரண்டு காரணங்களைத் தவிர ஒரு சிலருக்கு தைராய்டு சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடலின் எடை அதிகரித்து தொப்பை ஏற்படும். தொப்பை ஏற்பட்டால் அன்றாட பணிகளைக கூட செய்வதற்கு சிரமமாகிவிடும். சற்று அலட்சியமாக இருந்துவிட்டால் இதயக் கோளாறு மற்ற...

தயிர் தரும் பலன்கள்

Image
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. தயிரில் உள்ள புரதம் பாலில் உள்ள புரதத்தை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும். ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். பாலைத் தயிராக மாற்றும் பக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பக்டீரியாவை உருவாக்குகிறது.தயிரில் இருக்கும் புரதம் இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு வ...

குழந்தைகளின் உணவு முறையில் கவனம் செலுத்துகின்றீர்களா?

Image
ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் எப்­போது தனக்குக் குழந்தை பிறக்­கு­மென்று அவளின் முதல் எதிர்­பார்ப்புத் தொடங்கி விடும். வைத்­தி­யர்­களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்­போது அவ­ளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறு­வார்கள். இவ்­வாறு ஆர்­வத்­துடன் இருக்கும் ஒரு தாய் தன்­னு­டைய உடல் நலத்­திலும் குழந்­தையின் உடல் நலத்­திலும் மிகவும் கவனம் செலுத்­து­வது அவ­சியம். அந்த வகையில் கடந்த காலங்­களில் போசாக்­கற்ற தாய்­மார்­களும் குழந்­தை­களும் ஆரோக்­கி­யத்தில் மிகவும் மந்த நிலை­யி­லேயே உள்­ளனர். இத­ன­டிப்­ப­டையில் கடந்த 17ஆம் திகதி சுகா­தார அமைச்சின் ஏற்­பாட்டில் கருத்­த­ரங்­கொன்று இடம்­பெற்­றது. இதன்­போது இலங்­கையை பொறுத்­த­மட்டில் 2007--2013 ஆண்டு காலப் பகு­தி­களில் நடத்­தப்­பட்ட ஆய்­வு­களின் பிர­காரம் ஏனைய உலக நாடு­க­ளையும் விட இலங்கை ஓர் ஆரோக்­கி­ய­மான நிலையில் காணப்­ப­டு­வ­தாக கருத்து தெரி­வித்­தி­ருந்­தது. அத­ன­டிப்­ப­டையில், சுகா­தார அமைச்சு கர்ப்­பிணி தாய்­மார்­க­ளுக்கும் அவர்­களின் குழந்­தை­க­ளுக்கும் பய­ன­ளிக்கும் வகையில் நல்ல பல கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தது. ஒரு த...

சர்­வ­ரோக நிவா­ர­ணி­ வெண்டிக்காய்

Image
வெண்­டிக்காய் சாப்­பிட்டால் மூளை வளரும் என்று சொல்லிச் சொல்­லியே குழந்­தை­க­ளுக்கு சோறூட்டும் அம்­மாக்­களை பார்த்­துள்ளோம். வெண்­டிக்­காய்க்கும் அறிவு வளர்ச்­சிக்கும் நேரடி தொடர்பு இருக்­கி­றதோ இல்­லையோ அனீ­மியா, ஆஸ்­துமா, கொலஸ்ட்ரோல், மலச்­சிக்கல், புற்­றுநோய், நீரி­ழிவு, வயிற்­றுப்புண், பார்வைக் குறை­பாடு என சகல நோய்­க­ளையும் தீர்க்கும் சர்­வ­ரோக நிவா­ர­ணி­யாக வெண்டிக்காய் உள்­ளது.   கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்கு மிகவும் அவ­சி­ய­மான போலிக் அமிலம் வெண்­டிக்காயில் அதி­க­மாக உள்­ளது. கர்ப்­பத்தில் உள்ள குழந்­தை­யா­னது நல்­ல­ப­டி­யாக வள­ரவும் முதல் ட்ரைமெஸ்­டரின் போதான குழந்­தையின் நரம்பு குழாய்­களின் வளர்ச்­சிக்கும் இந்த போலிக் அமி­ல­மா­னது மிகவும் அவ­சியம்.   வெண்­டிக்­காயின் சிறப்பே அதன் வழவழப்புத் தன்­மைத்தான். ஆனால் அந்தக் வழவழப்பு பிடிக்­கா­மலே பலரும் அதை சேர்த்துக் கொள்­வ­தில்லை.   உண்­மை­யிலே அந்த வழ­வ­ழப்புத் தன்­மை­யில்தான் வெண்­டிக்­காயின் அத்­தனை மருத்­துவப் பலன்­களும் மறைந்­துள்­ளன. இந்த வழ­வ­ழப்பில் உள்ள நார்ச்­சத்து அல்சர் பாதித்­த­வர்­க­ளுக்கு ...

சளித் தொல்லை

Image
ப ருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே! * குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும். * காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். த...